Trending

Thursday 20 June 2013

நம் முன்னோர் படிக்காதவர்களா..?





வெள்ளையர்களும், வெளிநாட்டு மதவாத சக்திகளும், அதன் ஏஜென்ட்களான நம்மூர் முற்போக்கு-திராவிட கிறுக்குகளும் நம் முன்னோர்கள் படிக்காதவர்கள்-பாமரர்கள்-பிற்போக்குவாதிகள் என்று பல காலமாக கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நம்ப வைத்துள்ளனர். இதனாலேயே, நம் சமூக வழக்கங்களையும் மரபுகளையும் தாழ்வாக பார்க்கும் பார்வையை ஏற்படுத்திவிட்டனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. நம் முன்னோர்கள் பெரும்பான்மையானோர் படித்தவர்கள்.அதற்கு பல வரலாற்று ஆதாரங்களை காட்ட முடியும்.

௧. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கன்னிவாடி கன்னகுல பட்டயம் என்னும் வரலாற்று ஆவணத்தில் முத்துசாமி கவுண்டர் என்னும் ஐந்து வயது பாலகன் பள்ளி சென்று வந்ததை குறிப்பிட்டுள்ளனர்.

௨. பழையகோட்டை வரலாற்றில் வண்ணார் சாதியில் பிறந்த ஒருவர் புலமை மிக்கவராக இருந்ததும் அவரை அன்றைய மன்றாடியார் உபசரித்தது பற்றியும் வரலாற்று குறிப்புகள் உண்டு.

௩. பட்டகாரர்களில் பலர் கல்வியோடு அஷ்டாவதானம் - தசாவதானம் என்னும் கலைகளும் பயின்றிருந்தார்கள்.

௪.எழுமாத்தூர் சமஸ்தானத்தில் பறையர் சாதியில் பிறந்த புலவர் ஒருவர் கோபம்கொண்டு சாபமிட்ட குறிப்பும் உள்ளது.

௫.கொங்கு பெண்கள் பலர் கல்வி, புலமையோடு பல இலக்கிய நூல்களையும் படைத்தது பற்றி கல்வெட்டுகளும், ஆவணங்களும் இருக்கின்றது.

௬. கொங்க கருணீகர் என்னும் சாதி கணக்குப்பிள்ளைகளாக இருந்தனர். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், ஊரார் விசேசம், போன்ற அனைத்து கணக்கு வழக்குகளும் அவர்கள் பார்க்கும் அளவு கணக்கீட்டு அறிவை வைத்திருந்தது எப்படி..?

௭. நம் பட்டயங்களை வெட்டியது ஆசாரியார்; கல்வெட்டுகளை வெட்டியது கல்தச்சர்கள்-அவர்கள் எப்படி வெட்டினார்கள்..?

௮. மோரூர் கன்ன கோத்திர காங்கேயர் உரிச்சொற்களுக்கு நிகண்டு தொகுத்து எழுதியிருந்தார்.

கொங்கு 18 குடிகளுள் புலவனார் என்ற சாதியையும் உண்டு. அவர்கள் தொழிலே புலமை பாடுவது தான். அவர்கள்தான் அன்றைய திண்ணை பள்ளி ஆசிரியர்கள் (உபாத்தியாயர்கள்). மங்கள வாழ்த்தில் கூட புலவனார் பற்றிய குறிப்பு உண்டு.

("கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து..";
"வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்து..")

கொங்கதேச பள்ளிகளில் அனைத்து சாதிக்கும் இடம் உண்டு. அதனால் தான் அனைத்து சாதியிலும் புலவர்கள் இருந்தார்கள். ஞானிகள்/முனிவர்கள்/சித்தர்களும் அனைத்து சாதியிலும் இருந்தார்கள். அன்றைய பள்ளி கல்வியில் உள்ளூர் வரலாறு பூகோளம், விவசாயம், நீராதாரம், இயற்கை வளங்கள், சமூகவியல், தர்ம-ஒழுக்க நெறி சார்ந்த புராண-இலக்கிய கல்வி, செயல்முறை தொழிற்கல்வி, சித்த மருத்துவம், பொறியியல் உட்பட பாரம்பரிய கலைகள் அனைத்தும் போதிக்கப்பட்டன.

இதை தரம்பால் என்னும் புகழ்பெற்ற இந்திய வரலாற்று-சமூகவியல் ஆய்வாளரும் தனது "Beautiful Tree" நூலில் உறுதி செய்கிறார்.

ஆரம்பகட்ட கல்வி புலவனாரிடத்தும், மேற்படி கல்விமுறைகள் துறை சார்ந்த பெரியோரிடத்தும் (குலகுரு விடத்திலும்) நடந்தது.

வெள்ளையர்கள் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்ததும், நம் பாரம்பரிய அறிவு மூலமான புலவனார்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தனர். அவர்கள் சாதியை முதலியார்களோடு சேர்த்து அவர்கள் அடையாளத்தையே மறைத்தனர். மெக்காலே கல்வி முறையில் படிக்காதவர்களுக்கு கல்வியறிவற்றோர் என்று கணக்கில் சேர்க்கப்பட்டனர். இன்றும் பல புலவர்கள் நம் கொங்கு நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமண நிகழ்ச்சியில் நாம் செய்ய வேண்டிய கடன்கள் உள்ளன.

புலவனார் பற்றிய மேலதிக தகவல்களுக்கு:http://kongupulavanars.blogspot.in/

எனவே பிற சதிகளுக்கு கல்வி மறுத்தோம் என்பதும் பொய்; நம்மவர்கள் படிக்கவில்லை என்பதும் பொய்; இடையில் சிலகாலம் நம் கொங்க தேசம் உட்பட பாரதம் முழுக்க ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தாலும் வெள்ளையர் சூழ்ச்சியாலும் நம் கல்வி முறையும் வரலாறும் மறந்தது என்பதே உண்மை.

கோடை வகுப்புகளுக்கு வெளியே அனுப்புவதை விட வெறும் ஒரு வாரமேனும் நம் கொங்கதேச வரலாறு, சமூக வரலாறு, பாரம்பரிய கலைகள் தொழில்நுட்பங்கள், புராணங்கள் போன்றவற்றை சொல்லித்தர வைக்கலாம். இன்றும் அதை மீட்க நம்மால் முடியும்!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates