Trending

Friday 20 December 2013

மனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா?





கொங்கு வெள்ளாள கவண்டமூடு மரபுப்படி சுத்த சைவம்னு சொன்னா எல்லாருக்கும் ஆச்சிரிமா இருக்கும். ஆனா அதுதா எதார்த்தம். நாம சைவம் தான்னு சொல்ல என்னென்ன ஆதாரம், எப்புடி அசைவம் திங்க ஆரம்பிச்சோம்? அசைவம் திங்கரதால என்னென்ன பாதிப்புன்னு பாப்பம், வாங்க. 

கொஞ்சம் இலக்கிய ஆதாரம்:

"காக்கை யுண்டிவாழ் வேளாளக் குடியனார் மற்றுயிர் 
வருத்தா வாழவழி செய்தீந்து தமக்குட நிலந்திருத்தி
கடைசால் வாழ்குடை தவறா பதினெண்குடி வாழவழி
ஈந்துடைக் கொண்டே புகழெய்த பெற்றக் கொங்கவர்"
-பழம்பாடல் 

கொங்கத்தில் ஆளும் வேளாளராகிய நாம் மாமிசம் தவிர்த்து காய்கறிகளயும், பழங்களையும் உண்டு, பிற உயிரிகளை வருத்தாது, தம் நிலத்தை சீர்செய்து வேளாண்செய்து பதினெட்டு குடிகளையும் காத்து வந்ததையும், அவர்களுக்கு வாழ வழி உண்டாக்கி கொடுத்ததையும் சொல்கிறது

கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர்   
(பட்டினப்பாலை 198-205)

உயிர்க்கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் ஆவுதி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் (குலகுரு) புகழைப் பரவச் செய்வார்கள் வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள். 

இதுபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வேளாளர் சைவ உணவுப் பழக்கமுடையோர் என்று சொல்லும்.

எங்கே அசைவம்?
இப்ப இருக்கற சாதிகள்ல கொங்கு வெள்ளாள கவண்டமூடாட்ட ஜாதி வரலாறு பதிவானது மித்த சாதிகள் ல இல்லீங்க. நம்பகிட்ட இருக்கற அத்தன ஆவணத்திலீமு வெள்ளக்காரன் வரதுக்கு முன்ன கவண்டன் அசைவம் சாப்பட்ட ஆதாரம் இல்லீங்க. அண்ணமார் சாமி வரலாறு நெறைய பேரு எழுதிருக்கறாங்க, பாடிருக்கறாங்க. எதுலீமே அண்ணமார் சாமியோ, அதுல வந்த கவண்டமூடோ அசைவம் திண்ணதா குறிப்பில்ல. நம்ம கல்வெட்டுங்க, செப்பேடு, பட்டயம், கைபீது, ஊர் வரலாறு, ஸ்தல புராணம், குடும்ப வரலாறுகள், சாசனம்னு எந்த எடத்திலியும் கறி திங்கறத சொல்லுலீங்க.

நம்ம கவண்ட சாதில பொறந்து தெய்வமான அண்ணன்மார்,  வேலாத்தா, வெள்ளையம்மாள், செல்லகுமாரசாமி, வீரமாத்திகள் எந்த சாமிக்கும் அசைவ படையல் கெடையாதுங்க. ரொம்ப அதிசீமா ஒன்னு ரண்டு ஊருல கைவண்ட சாதில பொறந்து தெய்வமானவங்களுக்கு அறியாமைல அசைவ படையல் போடறாங்க. கறி சாராய படையல் கருப்பனார், மினி, அப்பறம் நாம கும்படற வேற ஜாதில பொறந்த சாமிங்க, உதாரணமா குப்பண்ணசாமி, மதுர வீரன், வீரமலை சாம்புவன்.

நம்ம சீர் சடங்கு எல்லாத்திலயும் சைவம் தானுங்க (பந்த கெடா வெட்டறத சிலர் சொல்லுவாங்க, அதுக்கு விளக்கம் பின்னால வரும்). மங்கள வாழ்த்துல கூட அசைவ உணவு பத்தி இல்லீங்க.

1860-1930 கள் வரைக்கும் நம்ப தேசத்துல கடுமையா பஞ்சம் வந்துச்சுங்க. ஏராளமான பேரு சோறில்லாத செத்துப் போனாங்க. அந்த காலத்துலதான் கொங்கதேசத்துல மட்டுமில்லாம எல்லா வட்டாரத்திளியும் கிறிஸ்தவம் பரவுச்சு. அப்போத்தான் நெறைய கலாச்சார சீரழிவுங்க நடந்துச்சு. அந்த பஞ்ச காலத்துலதான் நம்மாளுக கிட்ட நெறைய கெட்ட பழக்கமெல்லா வந்துச்சு. சாராயம் குடிக்கறது, கறி திங்கறது மாதிரி. அப்ப திராவிடகாரனுங்க வந்து அந்த கெட்ட பழக்கமெல்லாம் உட்டுட்டு திருந்தி ஒழுக்கமா பொழைக்க போகாதமாதிரி  பார்த்துக்கிட்டாங்க. அது இன்னிக்கு வரைக்கும் இருக்குது.

மொதல்ல நோம்பி நொடியப்ப மட்டும் பிரசாதம் னு திண்ணாங்க. அப்பறம் ஊட்டுக்கு வெளிய வச்சு சோறாக்கி கறி காச்சி திண்ணாங்க. அதைக்கூட பேரால் சட்டி னு சொல்லுவாங்க. இன்னிக்கும் பல குடும்பங்கள் ல கறி ஆக்குனா அத வெளிய வச்சுதான் ஆக்குறாங்க. தின்னுட்டு குளிசிட்டுத்தான் ஊட்டுக்குள்ளார வரோணும். கடைல கறி வாங்கி திங்கற பழக்கம் நம்பகிட்ட இல்லீங்க. கடய "கசாப் கடை" னு சொல்றோம். கசாப்ங்கறது உருது வார்த்தைங்க. கசாப் ணா கறி வெட்டறவன் னு அர்த்தம். இப்ப அடிக்கடி நடக்குது. போதாக்கொறைக்கு சினிமாவில் திராவிட குப்பைல கெடந்தவங்க கவண்டன் கதை னு சொல்லி சாயங்காலம் ஆச்சுனா சாராயம் குடிச்சு கறி வறுத்து திங்கறவன் தான் கவுண்டன்; குடிச்சிட்டு கூத்தியா வைக்கறவன்-வேளைக்கு வர்ற மத்த சாதி பொம்பளைங்கல சீண்டறவன் தான் கவண்டன் னு நம்ம மரபுகளையே தப்பா நமக்கு சொல்லிக் குடுத்தாங்க.


அதெல்லாம் சுத்த பொய். கவண்டன் ணா கறி சாராயம் கூடாது; பொண்டாட்டிய தவற மித்த பொம்பளைங்கல நெனைச்சு பார்க்க கூடாது; ஒழுக்கமா சொன்ன வார்த்தை மாறாம பொழைக்கணும்; எல்லா சாதிகளையும் அரவணச்சு காப்பாத்தணும். அவன்தான் கவண்டன்.

கெடா வெட்டு
கவுண்டர்க கறி திங்கக் கூடாது னா அது இல்லை னு சொல்ல ரண்டு விசியம் சொல்லுவாங்க. ஒன்னு பந்த கெடா விருந்து போடறது, ரண்டாவது கோயல்ல கெடா வெட்டறது.

இந்த உயிர் பலிங்கறது கோயில் ல மட்டுமில்லீங்க; பல இடங்கள் ல குடுப்பாங்க. அதாவது ஒரு கட்டடம் கட்டரப்ப இடிக்கரப்ப; ஒரு ஏரி, கெணறு தொண்டரப்ப மூடுரப்ப; பொதயல்  பொதைச்சு வைக்கரப்ப-எடுக்கரப்ப; வாய்க்கா -அணை உருவாக்கரப்ப; தேர் கட்டரப்ப, ஓட்டரப்ப, ஓடி முடுச்சு நிலைல நிருத்தரப்ப; புதுசா ஒரு இயந்திரம் ஓட்டரப்ப ஒடைக்கரப்ப; பந்தல் போடறப்ப, பிரிக்கரப்ப; ஒரு சக்ரவர்த்தி வர்றப்ப, சாமிய நோம்பிக்கு எடுத்தாரப்ப னு பல இடங்கள் ல மரியாதை நிமித்தமா அல்லது கறுப்பு சக்திகள ஏவி விடரதுக்கும் சாந்தி செய்யரதுக்கும் அல்லது கண் திருஷ்டி கழிக்கனு பலி குடுக்கறது நடக்கும். நம்ம அம்மன் கோயிலின் தெய்வ சக்தி-கறுப்பு சக்திகள் கண தேவதைகளுக்கானது. 

ஒரு காணிக்கு தலைவரு காணியாள கவுண்டரு. அதேபோல காணிக்கு தெய்வம் காணியாச்சி அம்மன். காநியாள கவுண்டருக்கு அங்குள்ள குடிசாதிகள் கட்டுப்பட்டது போல, காணில இருக்கற கறுப்பு, மினி போன்ற கணதேவதை எல்லாம் காணியாச்சிக்கு கட்டுப்பட்டது. கெடா வெட்டும்போது அந்த ஆத்மாவைத் தான் அம்மனுக்கு குடுக்கரம். அந்த ரத்தமும் படையலும் கருப்பனாருக்கும் மினிக்கும் தான். எப்பிடி காணியாச்சி அம்மனுக்கு கறி படையல் கெடையாதோ அதே மாதிரி கவுண்டருக்கும் அசைவ சோறு கெடையாது.

கறி திங்கற ஜாதில பொறந்த சாமிங்க மற்றும் கருப்பு சக்திகளுக்குத்தா கறி படையல் னு சொன்னோம். அதுபோல நம்ம பலி குடுக்கற மிருகங்களோட கறிய நம்ம குடி ஜாதிகளுக்கு பிரிச்சு குடுத்துருவோம். ஒரு பழமொழி கோட சொல்லுவாங்களே, "வண்ணான் ஆட்டுத் தலைக்கு பறந்த மாதிரி"னு . அப்ப முந்தி கவுண்டமூடு தலைக்கறி திங்கலை னு அர்த்தமா என்ன..?

இந்த கெடா வெட்டுங்கறதுல இப்ப ஒரு தப்பு நடக்குது. கெடா வெட்டும்போது ஆடு துளுக்குன உடனே கத்திய மேல இருந்து கீழ எறக்கி வெட்டணும். மொதல்ல பொடனி வெட்டப்படனும். அதுதான் கெடா "வெட்டு". "அறுப்பு" கூடாது. இப்ப முஸ்லீம்ங்க ஹலால் க்கு மந்தரம் சொல்லி அறுக்கற மாதிரி கழுத்துல கீறி விட்டு அறுக்கறது நம்ம வழக்கத்துல ரொம்ப தப்பு மட்டுமில்ல, அப்படி அறுத்து அந்த கறி தின்னா உடம்புக்கு ரொம்ப கெடுதல் கூட. பயத்துல அந்த ஆடு உடம்புல கடுமையா வெஷம் மாதிரி ஹார்மோன் சுரந்திடும் (நாம கூட ரொம்ப பயந்தா இதயம் வேகமா துடுச்சு வேர்த்து ஒன்னுக்கு வந்து பட படனு அடிச்சிக்குதே அது மாதிரி). அறுத்து கொன்ன ஆடுகளை தொங்க விட்டுருக்கரத்தை பார்த்தா துண்டு போட்டப்பறமும் அதோட தொடை மற்றும் சதைப் பகுதிங்க துடிக்கும்; அது அந்த ஹார்மோன் வேலைதான். அந்த கறி திண்ணா வெறி வரும் ஹார்மோன் தாறுமாறா வேலை செய்யும். நரம்பு மண்டலம் பாதிக்கும்.






அது சரி, முதல் ல மனுஷ பொறப்புக்கு கறி திங்கலாமா? சீமை விஞ்ஞானம் என்ன சொல்லுது?

• சைவ விலங்கினங்கள் உடல் முழுக்க வியர்க்கும், அசைவ விலங்குகள் நாக்கில் வியர்க்கும்

• சைவ பிராணிகளுக்கு தட்டையான பற்கள இருக்கும், முன் பற்கள கடித்து கத்தரிக்க பயன்படும். அசைவ விலங்கினங்களுக்கு தட்டையான பற்கள கிடையாது. கூரிய பற்கள மட்டுமே.

• அசைவ விலங்குகளுக்கு அதன் குடல் நீளம் குறைவு. அழுகிவிடும் மாமிசம் சீக்கிரம் வெளியேறிட வகை செய்யும். சைவ பிரானகளுக்கு அதன் உடல் நீளத்தை விட 20 மடங்கு குடலின் நீளம் இருக்கும். மனிதர்கள் குடல் அவர்கள் உடல் நீளத்தை விட 20 மடங்காகும்.

• அசைவ விலங்கினங்களுக்கு வயிற்றில் ஆசிட் (hydrochloric (HCl) acid) காரத்தன்மை மிகுந்திருக்கும். சைவ பிராணிகளுக்கு குறைவாகவே இருக்கும்.மனிதர்களுக்கு சைவ பிராணிகள் போலத்தான் உள்ளது.

• அசைவ விலங்குகள் நீரை நக்கிக்குடிக்கும். சைவ விலங்குகள் உறிஞ்சிக் குடிக்கும்.


நம் முன்னோர் யாரும் மாமிசம் உண்டதில்லை. நம் கொங்கு வெள்ளாள சாதியில் பிறந்து வாழ்ந்து கடவுளான தெய்வங்களான வெள்ளையம்மா, வீரமாத்தி, செல்லகுமாரசாமி, அண்ணன்மார் உட்பட யாருக்கும் மாமிசம் கிடையாது. நம் கொங்கு சீர் சடங்குகள் எதிலும் அசைவ உணவு கிடையாது. மங்கள வாழ்த்திலோ, அண்ணமார் கதைப்பாடலிலோ, இன்னபிற செப்பேடு பட்டய கல்வெட்டு செய்திகளிலோ காராள கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் யாரும் மாமிசம் உண்ட சிறு குறிப்பு கூட கிடையாது. (கெடா வெட்டு என்பது கறுப்பு சக்திகளுக்கான கண பூசை. அதன் மாமிசமும் நமக்கானதல்ல. நம் குடிபடைகளுக்குத்தான். "வண்ணான் ஆட்டுத்தலைக்கு பறந்தது போல" என்ற பழமொழியை எண்ணிபார்க்கவும். குடிபடைகள் யாரும் இல்லையேல், அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டது). கறுப்பு சக்திகளுக்கு மட்டுமில்லை, ஏரி-குளம் வெட்டையில், தெய்வ புறப்பாடு, அரசன் வருகையின்போது (திட்டி கிடாய் என்னும் திருஷ்டி கிடாய்), போர் துவங்கையில், புதையல் வைக்கும்போதும் எடுக்கும்போதும். கட்டிடம் காட்டும்போதும், இடிக்கும்போதும் பலி கொடுக்கவேண்டியது அவசியம். வீடு புண்யார்ச்சனையின்போது கெடா வெட்டுவதற்கு பதில்தான் இப்போது நீர்பூசணியில் சிகப்பு தேய்த்து வெட்டுவது.


கொங்கு வெள்ளாளர் தொழில் திறமை, அறிவுத்திறன், ஒழுக்க நெறி அனைத்தும் அசைவம் உண்ணாமல் இருந்ததால் உடல்/மன ஒத்துழைப்பால் நமக்கு சுலபமாக இருந்தது.

அசைவ உணவு என்பது நம்ம சாதிக்குள் மெல்ல திணிக்கப்பட்ட விஷப் பழக்கம். முஸ்லிம்கள் காலத்தில் துவங்கி (கறிக்கடை: கசாப் கடை), வெள்ளை ஆட்சியில் பஞ்ச காலத்தில் உறுதியாக படர்ந்தது.


அசைவ உணவு உண்பதால் தான் கவுண்ட சாதிக்கான குணம் மாறுபட்டு போகிறது. சாதி ஒழுக்கம் கடைப்பிடிக்க, தொழில் அறிவு, சூட்டிப்பு உண்டாக சைவ உணவு இன்றியமையாதது. அசைவ உணவு உண்டு நம் நாட்டை தேசத்தை நிர்வகிப்பதென்பது சாத்தியமற்றது. மூளை மற்றும் மனம் ஒத்துழைக்காது. எனவே முழு கவுண்டனாக வாழ நினைத்தால் அசைவத்தை அறவே விலக்க வேண்டும்.





காராளன் கறி திங்க கூடாது!

மேழி பிடித்த கை கோழி பிடிக்க கூடாது!


3 comments:

  1. எனக்கு ஒரு சந்தேகம்
    அண்ணமார் பாடலில்
    "வந்துமே உட்காரந்தான் மசச்சாமி காரளன்
    வாழையிலை போட்டு வட்டித்தார் சாதம் கறி
    சாப்பிட்டு இளைப்பாறி சந்தோஷமாகியேதான்
    இருக்கின் றவேளையிலே இவனுடைய மாமன்ந்தான் ஆட்டுக்கார கருஞ்சியன் அவனையழைத்துமேதான் "
    இது தான் புரியவில்லை

    ReplyDelete
  2. கறி என்ற சொல் மிளகு என்ற அர்த்தம் தரும்.. மேலும் காய்களுக்கும் கறி என்ற சொல் பொருந்தும்.. மாமிசம் மட்டுமே கறி என்று அர்த்தமில்லை..

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates